இந்தியா, ஜூன் 9 -- குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது சைட் டிஷ்ஷாகவோ செய்ய ஏற்றது இந்த சோயா 65. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பும் இந்த சோயா 65யை நீங்கள் சுவையானதாக வீட்டிலே செய்யலாம். அதுவும் உள்ளே மிருதுவாகவும், வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* மீல் மேக்கர் - ஒரு கப்

(இதை சூடான தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து, அப்படியே எடுத்து ஆறிய நீரில் சேர்த்து வடித்து கைகளால் அல்லது துணியில் சேர்த்து பிழிந்து எடுக்கவேண்டும். 65 செய்வதற்கு ஊறிய சோயாக்களை நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை நீங்கள் கைகளால் பிழிந்தால், ஒரு 10 முதல் 15 முறை பிழிந்து எடுக்கவேண்டும். எனவே ஒரு வெள்ளை பனியன் துணையில் போட்டு பிழிந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் சில நிமிடங்களில் நீங்கள் சோயாவை பிழிந்து ...