இந்தியா, ஏப்ரல் 19 -- உணவு உண்ட பின்னர் ஒரு சிலருக்கு எளிதாக செரிமானம் நடந்துவிடும். ஆனால் சிலருக்கு உணவு செரிக்க தாமதாகும். ஆனால் அனைவருமே அதிகம் சாப்பிட்டுவிட்டால் அது செரிப்பதற்குள் சிரமமாகிவிடும். எனவே செரிமானத்தை அதிகரிக்க நாம் சில வழிகளை கடைபிடிக்கவேண்டும். உடலின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சோம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க சோம்பை நீங்கள் எப்படியெல்லாம் சாப்பிடவேண்டும் என்று பாருங்கள்.

நீங்கள் நல்ல முழுமையான ஒரு மீல்ஸ் சாப்பிட்ட பின்னர் ஒரு ஸ்பூன் சோம்பை எடுத்து வாயில் போட்டு மெல்லலாம். இதனால் உங்களின் சுவாசம் புத்துணர்வு பெறுவதுடன், செரிமான சாறுகளும் தூண்டப்படும். இது உங்களுக்கு ஒரு சிறப்பான வழியாகும்.

ஒரு ஸ்பூன் சோம்பை ஒரு டம்ளர் தண்ணீரில் ஓரிரவு ஊற வைக்கவேண்டும். இதை வடிகட்டி காலை...