இந்தியா, மார்ச் 16 -- நீங்கள் சைனஸால் அவதிப்படுகிறீர்களா? குறிப்பாக பருவ மாற்றத்தால் உங்களின் உடல் நிலை கட்டாயம் பாதிக்கப்படும். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படுவார்கள். உங்களுக்கு ஏற்கனவே சைனஸ் அல்லது அலர்ஜி இருந்தால், உங்களுக்கு தலைவலி, மூக்கடைப்பு, சளி என இருந்து இரவில் உறங்கவிடாமல் தொல்லைதரும். இதற்கு எளிய தீர்வை டாக்டர் சன்சால் ஷர்மா கொடுக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

சைனுசைட்டிஸ் என்பது உங்கள் மண்டைக்குள் காற்று நிறைந்திருக்கும் பகுதிகளில் ஏற்படும் தொற்றுகளால் உருவாகிறது. இதனால் சிறிய வீக்கம் ஏற்படும். இது அதிகப்படியான சளியைத் தோற்றுவிக்கும். இதனால் பாக்டீரியாக்கள் வளரும் சூழல் உருவாகும். இதற்கு வைரஸ்களே காரணமாகின்றன. பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகளும் இதில் பங்களிக்கின்றன. அதன் பொதுவான அறிகுறிகளாக...