இந்தியா, ஏப்ரல் 26 -- சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் நடந்த பட்டாசு விபத்திற்கு தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று (ஏப்ரல் 25) நடந்த பட்டாசு வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இன்று காலை, விபத்து நடந்த பகுதியை பொதுமக்கள் ஆய்வு செய்தபோது, 100 மீட்டர் தொலைவில் ஒரு கால் மற்றும் அருகிலுள்ள வீட்டு முற்றத்தில் ஒரு கை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினர் உடல் பாகங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த உடல் பாகங்கள் உயிரிழந்தவர்களுடையதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

கோவில் திருவிழாவின் முக்...