இந்தியா, ஏப்ரல் 19 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். சித்த மருத்துவத்தை மக்கள் எளிதாக பின்பற்றும் வகையில் விளக்கி வருகிறார். இவரது அண்மை வீடியோவில் அவர் சேற்றுப்புண் ஏற்படும் காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

சேற்றுப்புண் ஏற்படுவதற்கான காரணம் குறித்து மருத்துவர் காமராஜ் கூறுகையில்,

சேற்றுப்புண் என்பது டேமியா பெடிஸ் என்ற பூஞ்ஜை நோய்க்கிருமியால் ஏற்படும். அதற்கு காரணம் என்னவெனில் ஈரத்துடனே செருப்பை அணிந்து நடப்பது மற்றும் சாக்ஸ் அணிந்து கொள்வதுதான் காரணமாகும். ஈரக்காலுடன் சூ அணிந்து கொள்வது என பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. வெளியில் சென்று வந்தால் கால் கழுவியவுடன் செரு...