இந்தியா, மார்ச் 14 -- அனைவருக்கும் பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமல்ல, ஏனெனில், நீங்கள் பணக்காரராக கடும் உழைப்பு மட்டும் தேவையல்ல, உங்களுக்கு ஒழுக்கம், அர்ப்பணிப்பு என எண்ணற்ற நற்பழக்கங்ளும் தேவை. நீங்கள் பணக்காரர் ஆகவேண்டுமெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில பண விதிகளை பின்பற்றுங்கள். இவை பணத்தை கையாளும் வழிகள். இதைப் பின்பற்றினால் சிக்கனம் அதிகரித்து, சேமிப்பு உயரும்.

சிறிய சேமிப்புகள் குறித்து குறைத்து மதிப்பிடாதீர்கள். பணத்தை நீங்கள் சிறிய அளவில் சேமிப்பது கூட, அதிக நாட்களாகும்போது, அது பெரிய அளவாக உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.

நீங்கள் ஒவ்வொரு முறை கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போதும் கவனமாக இருக்கவேண்டும். கடன் நல்ல கிடையாது என்பதை நினைவில்கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையைக் கொடுக்காது. உங...