இந்தியா, மார்ச் 20 -- வேர்க்காய்கறிகள் உடலுக்கு நல்லது. அதிலும் குறிப்பாக சேப்பங்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் ஆரோக்கியமான ஃபைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள குயிர்சிட்டின் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கும். இதில் உள்ள மினரல்கள் நீரிழிவு நோயையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இது எலும்புகளையும் வலுப்படுத்தும். இதை நீங்கள் ஊறவைத்து எண்ணெயில் வறுக்கவேண்டும். மசாலாக்களையும், புளிக்கரைசலையும் சேர்த்து இதை மேரியனேட் செய்யும்போது, அது நல்ல மணத்தைத் தரும்.

* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* சோம்பு - கால் ஸ்பூன்

* வெந்தயப் பொடி - அரை ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* சீரகத் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலைத் த...