சென்னை,கோவை,திருச்சி,மதுரை, ஏப்ரல் 22 -- நம்மில் பலருக்கு வாழ்நாள் லட்சியம், ஆசை, விருப்பம் எல்லாம் சொந்த வீடு வாங்குவதுதான். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரது எண்ணம். நமக்கு பின்னர் வரும் சந்ததியினர் சுகமாக வாழ கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும், பெயர் சொல்ல ஒரு வீடாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

மேலும் படிக்க | உங்கள் வீட்டில் பூஜை அறை எங்கே இருக்கிறது? இந்த வாஸ்து தவறை செய்யாதீங்க! ஜோதிடம் சொல்லும் ஷாக் தகவல்!

அனைத்தையும் விட மேலாக இன்றைய காலத்தில் சொந்த வீடு என்பது சமூக அந்தஸ்தாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சொந்த வீட்டின் பெருமை வாடகை வீட்டில் இருப்பவர்களுக்குதான் தெரியும். ஒவ்வொரு முறையும் வீடு ப...