இந்தியா, மே 19 -- 47 வயது நிரம்பிய நடிகர் விஷாலின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விஷால் பேராண்மை, கபாலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று நடந்த சாய் தன்ஷிகாவின் யோகி டா இசை வெளியீட்டு விழாவில் உறுதியானது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.பி உதயகுமார், 'நல்ல வேலையாக என்னை நீண்ட நேரம் உட்கார விடாமல் அழைத்து விட்டீர்கள். உண்மையில் ட்ரெய்லரை பார்த்து நான் பயந்து விட்டேன். என்ன அடி அடிக்கிறார் தன்ஷிகா; அவரது பக்கத்தில் உட்காருவதற்கு மிகச் சரியான ஆள்தான் தற்போது விஷாலாக உட்கார்ந்து இருக்கிறார். தன்ஷிகாவும் விஷாலும் காதல் வயப்பட்டு இருக்கிறார்கள்.

நடிகர் சங்கத்தை நீ திறந்து விட்டால் அதில் எனக்கு எ...