இந்தியா, மார்ச் 26 -- சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலியைப் பறித்த 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை கைது செய்தோம். சென்னையில் வழிப்பறி செய்யப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.

நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக தகவல் வந்தவுடன் சோதனை தொடங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தே வழிப்பறி கொள்ளையர்களை நெருங்கினோம். விமானத்தில் பயணிக்க கடைசி நேரத்தில் யாரேனும் டிக்கெட் வாங்கினார்களா என்று விசாரண...