இந்தியா, மார்ச் 6 -- சென்னை மண்ணடியில் உள்ள இம்ப்ராஹிம் தெருவில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர். 4 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறனர். இவர்களின் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் வீரர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைசி டெல்லி விமான நிலையத்தில் சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதின் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. ...