இந்தியா, மே 6 -- சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத் துறை திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் விருகம்பாக்கம், சாலிகிராமம், டி.நகர், அசோக் நகர், ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகள் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பான முறைகேடு புகார்களின் அடிப்படையில் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசோக் நகரில் உள்ள என்.சி.எஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குநராக உள்ள ஏ.கே.நாதனின் கோட்டூர்புரம் இல்லம், 360 பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோயம்பேடு ஜெயநகரில் உள்ள எக்கோ கேர் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குணசேகரனின் இல்லம், ...