இந்தியா, மார்ச் 25 -- சென்னை அடையாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிண்டி, சைதாப்பேட்டை, பெசண்ட் நகர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இருசக்கர வாகனத்தில் சென்று எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மூதாட்டிகள் உள்ளிட்டோரிடம் இருந்து மொத்தம் 20 சவரனுக்கும் மேல் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. மாறுமா கூட்டணி கணக்கு?.. முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு என தகவல்!

பள்ளிக்கரணையில் இருந்து அடையாறு, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் சில மணி நேரத்தில் இந்த குற்றச் செயல்கள் ...