இந்தியா, ஏப்ரல் 28 -- சென்னையில் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினர் கைது செய்யபட்டு கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையின் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி குடும்பமாக வசித்து வந்த இவர்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க:- கோவையில் விஜய்க்கு டஃப் கொடுத்த உதய்! விமான நிலையம் முதல் ரோட்ஷோ! ஒரு கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

வங்கதேச நாட்டவர்கள் சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக டெல்லி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் தீவ...