இந்தியா, ஜூன் 22 -- சமீபத்தில் சென்னையின் இரவு நேர அதிகபட்ச வெப்பம் 30degC ஆக உயர்ந்துள்ளது. 20.6.25-21.6.25 அன்று அது 29degC ஆக உள்ளது.

20 ஆண்டுகளில் இரவு நேர சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 1.5degC உயர்ந்துள்ளது. 2001ல் 23degC என இருந்தது 2021ல் 24.5degC ஆக உயர்ந்துள்ளது.

இதனால் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்.

சென்னையை பொருத்தமட்டில் கடற்கரைக்கு அருகில் இருப்பதால் ஈரப்பதத்தின் அளவும் சமீப காலமாக 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 30-60 சதவீத ஈரப்பதம் இருந்தால் உடல் நலம் அதிகம் பாதிக்காது. அதிக ஈரப்பதம் காரணமாக 6.3degC வரை வெப்ப அழுத்தம் அதிகரிக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சென்னையின் அதிக ஈரப்பதம் காரணமாக, உடல் வியர்வை மூலம் வெப்பத்தை இழக்க முடியாமல் போய் உடலில் நோய்கள் ஏற்படுகிறது.

இரவு நேர அதிக வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்

1) இறப்பு வ...