இந்தியா, மார்ச் 21 -- தக்காளியில் எதைச் செய்தாலும் அது சுவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த செட்டிநாடு தக்காளி குருமா அதிக சுவையானது மட்டுமின்றி செய்வதும் எளிது. உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். இந்த செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா டிஃபனுக்கு ஏற்றது. சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம், என்றாலும் இட்லி, தோசை, ஆப்பம், உப்புமா, பொங்கல் என டிஃபனுடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை அள்ளும்.

* தக்காளி - 10 (பொடியாக நறுக்கவேண்டும்)

* பச்சை மிளகாய் - 2

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* முந்திரி - 8

* பூண்டு - 8 பல்

* சோம்பு - அரை ஸ்பூன்

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* கசகசா - ஒரு ஸ்பூன்

* பட்டை - 2 இன்ச்

* கடுகு - ஒரு ஸ்பூன்

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை -...