இந்தியா, மார்ச் 5 -- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல் வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 05) காலை மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார். பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர், பவானிசாகர் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரூர், நகர, வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.பூத் கமிட்டி அமைப்பது மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோச...