இந்தியா, ஜனவரி 6 -- வயதாகும்போது உங்களுக்கு செக்ஸில் நாட்டம் குறைவது என்பது இயல்பான ஒன்றுதான். பெண்ணுறுப்பில் வறட்சி, மூட்டுகளில் வலி, செக்ஸில் ஆர்வம் குறைவது என உங்கள் நெருக்கமான நேரங்கள் உங்கள் இணையருடன் அதிகம் இருக்காது. இது உங்கள் உறவில் எண்ணற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனினும், நீங்கள் சில விஷயங்களைச் செய்து உங்கள் செக்ஸ் ஆர்வத்தை அதிகரித்துக்கொள்ளலாம். நல்ல உணவே அந்த மாற்றங்களைச் செய்யும். அப்படி நீங்கள் பருகக்கூடிய பானங்கள் என்னவென்று பாருங்கள். பெண்கள் தங்களின் செக்ஸ் உணர்வுகளை எப்படி அதிகரித்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், அதைச் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அதற்கு நிபுணர் சில உடற்பயிற்சிகள், சரிவிகித உணவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என கூறுகிறார்கள். இதனால் உங்களின் பாலியல் உணர்வுகள் தூண்டப்படுகிறது. மேலும் உங்கள் பாலியல...