இந்தியா, ஏப்ரல் 14 -- வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றம் செய்வார்கள். இந்த நிகழ்வு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்தவகையில், நவகிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் தமிழ் புத்தாண்டு தினமான இன்று (ஏப்ரல் 14) மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார்.

சூரிய பகவான் மேஷ ராசிக்குள் நுழைவது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வேத ஜோதிடம் கூறுகிறது. இருப்பினும் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப்போகிறது என்று நம்பப்படுகிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாவது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பலன்களைத் தரும் என்பது பற...