இந்தியா, மார்ச் 6 -- சூரிய பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அவ்வாறு கிரகங்கள் மாறும்பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒவ்வொரு முறை ராசி மாற்றம் செய்யும் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவான் தற்போது சனிபகவானின் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மார்ச் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மீன ராசிக்கு செல்கின்றார். இது குருபகவானின் சொந்தம...