இந்தியா, ஏப்ரல் 3 -- Sun Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் சூரிய பகவான். இவர் தற்போது மீன ராசியில் பயணம் செய்திருக்கின்றார். மீன ராசிகள் தற்போது சனிபகவானும் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையப் போகின்றார்.

தற்போது மீன ராசியில் சூரியன் சனி இணைந்து இருக்கின்ற காரணத்தினால் இது பலராசிகளுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் வித்தியாசமாக மாறும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரியன் மேஷ ராசிகள் நுழையும் திருநாள்தான் தமிழ் புத்தாண்டு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசுவாவசு தமிழ் புத்தாண்டு திருநாள் அன்றைய தினம் பிறக்கின...