இந்தியா, மார்ச் 21 -- Sani Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் நிலைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்கள் இடத்தை மாற்றும் பொழுது ஒரு சில நேரங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழும். அது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படக் கூடிய கிரகங்களின் சேர்க்கையானது வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று நிகழவுள்ளது.

இந்நிலையில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு செல்கின்றார். அந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் மீன ராசியில் சனி மற்றும் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. அதே சமயம் அதே நாளில் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிர...