இந்தியா, மே 15 -- கோடை காலம் வந்துவிட்டால் போதும் பலருக்கும் பசி குறைவாகத்தான் இருக்கும். அதிக வெப்பத்தால் செரிமானமும் மெதுவாகும். அதோடு புதியதாகவும், சுவையாகவும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் வெப்பத்தால் அதிகமாக சாப்பிட மனம் வராது. உங்களுக்கும் இப்படித்தான் இருக்கிறதா? அப்படியானால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த பச்சை மாம்பழ சட்னி ரெசிபியை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.

இந்த சட்னியின் சிறப்பம்சம் என்னவென்றால் இது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், கோடையில் பசியை அதிகரிக்கவும் உதவும். பச்சை மாம்பழத்தின் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை உங்கள் நாக்கில் புதிய அனுபவத்தை கொடுக்கும். இதில் உள்ள மசாலா பொருட்கள் உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக சாப்பாட்டிற்கு பிறகு கொஞ்சம் இந்த சட்னியை சாப்பிட்டா...