இந்தியா, மார்ச் 28 -- தமிழ்நாட்டில் பல விதமான பாரம்பரிய உணவுகள் உள்ளன. அவை பல ஆண்டுகள் கழித்து இன்றும் பல உணவுகளை நாம் தயாரித்து சாப்பிட்டு வருகிறோம். இது போன்ற உணவுகள் என்றும் மாறாத சுவையை நமக்கு வழங்குகின்றன. இதனை நமது தாத்தா பாட்டிகள் இயல்பாகவே சாப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று நாம் துரித உணவுகள் பின்னாடி சென்று கொண்டிருக்கிறோம். இது போன்ற சூழ்நிலைகளில் தமிழ்நாட்டின் பாராம்பரிய உணவுகள் எங்கும் கிடைப்பதில்லை. இனி அது குறித்து கவலைபாடத் தேவையில்லை. தமிழ்நாட்டின் பாராம்பரிய உணவுகளில் ஒன்றாக கட்டு சோறு இருந்து வருகிறது. இந்த வகை சாப்பாடு நாகூர், வேதாரண்யம் பகுதிகளில் பிரபலமாக செய்யப்படும் உணவாகும். இது சாப்பிடுவதற்கு அருமையான சுவையில் இருக்கும். இதனை செய்வதும் மிகவும் எளிமை தான். வீட்டிலேயே அசத்தலாக கட்டு சோறு எப்படி செய்வது என்பதை இங்கு கா...