இந்தியா, ஏப்ரல் 13 -- சுரைக்காய் சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. அந்தக்காயில் எது செய்தாலும் சாப்பிட மாட்டார்கள். குழந்தைகளுக்கு சுரைக்காயெல்லாம் அறவே பிடிக்காத காய். வறுவல் காய்கள்தான் அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் சுரைக்காய் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய். அதை நாம் அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும். எனவே அதற்கு நீங்கள் இதுபோல் துவையல் அரைத்துக்கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த துவையலை நீங்கள் சாதம் மற்றும் இட்லி, தோசை உள்ளிட்ட டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியும். இந்த சுரைக்காய் சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* சுரைக்காய் - 2 கப்

* தக்காளி - 2 (மிதமான அளவு)

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ...