இந்தியா, ஏப்ரல் 19 -- சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரை அவரது அழகிய கண்கள், தெத்துப்பல் மற்றும் நடிப்பால் கட்டியிழுத்த நடிகை சுவாதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. தென்னிந்திய நடிகை சுவாதியின் கதையை வாருங்கள் அறிந்துகொள்வோம்.

யார் இந்த சுவாதி?: சுவாதி, 1987ஆம் ஆண்டு, ஏப்ரல் 19ஆம் தேதி அன்றைய சோவியத் யூனியனில் இருக்கும் விளாடிவோஸ்டாக் நகரில் பிறந்தவர். சுவாதியின் தந்தை இந்திய கப்பல்படையில் இருந்தபோது, ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, குடும்பத்துடன் அங்கு இருந்தார். அப்போது சுவாதி அங்கு பிறந்தார். இவருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர், சுவாதிக்கு வைத்த பெயர், 'சுவெட்லனா'. ஆனால், அவரது தாய், அவரது பெயரை சுவாதி என மாற்றினார்.

அதன்பின், சுவா...