இந்தியா, ஏப்ரல் 20 -- உலகில் தீமைகள் தலை தூக்கும் பொழுது அவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநாட்டும் கடவுளாக விஷ்ணு பகவான் விளங்கி வருகின்றார். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான பக்தர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக நமது இந்தியாவில் பெருமாளுக்கு ஏக பக்தர்கள் இருந்து வருகின்றனர்.

விஷ்ணு பகவானுக்கு எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது நாட்டிலிருந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் விஜயவாடாவில் இருக்கக்கூடிய மங்களகிரி ஸ்ரீ பனகால லட்சுமி நரசிம்மர் கோயில்.

இந்த திருக்கோயில் நரசிம்ம பகவானின் பஞ்ச ஷேத்திரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ராஜா பரியாத்ராவின் மகன் ஹிரஸ்வ ஸ்ருங்கி என்பவர் நரசிம்மரை நினைத்து இந்த இடத்தில் தவம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஒரு கட்டத்தில் யானை வடிவம் மலையாக ம...