இந்தியா, மார்ச் 25 -- இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு உணவுகள் என்றாலே அதற்கு உலக அளவில் பெரிய வரவேற்பு உள்ளது. ஏனெனில் இங்கு செய்யப்படும் அனைத்து இனிப்பு உணவுகளுக்கும் தனிப்பட்ட சுவை இருப்பதால் உலக அளவில் அந்த பெயர் கிடைத்துள்ளது. பல வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்தால் அவர்கள் ருசித்து பார்க்கக்கூடிய உணவுகளில் நிச்சயமாக இந்திய இனிப்பு உணவுகள் இருக்கும். அந்த அளவிற்கு இந்திய இனிப்பு உணவுகள் அனைவருக்கும் பிடித்த உணவாக உள்ளது. ஏனெனில் இந்தியாவில் திருவிழா என்றாலும் கொண்டாட்டம் என்றாலும் நிச்சயமாக ஏதேனும் ஒரு இனிப்பு உணவு இடம் பிடித்து விடும்.

இந்த வகையில் பலவிதமான கொண்டாட்டங்களின் போதும் சிறப்பான ஒரு இனிப்பு உணவாக இருந்து வருவது அல்வா, வட மற்றும் தென்னிந்திய பகுதிகளில் அல்வா பிரதான இனிப்பு உணவாக இருந்து வருகிறது. ஆனால் நாம் அல்வா சாப்பிட வ...