இந்தியா, மார்ச் 19 -- Sukraditya Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். கிரகங்களின் இடமாற்றம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களோடு ஒன்றிணைந்து செயல்படும்பொழுது யோகங்கள் உருவாகும். அது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிர பகவான் மீனராசிகள் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று நவகிரகங்களின் தலைவனாக விளங்...