இந்தியா, மார்ச் 14 -- Shukraditya Yoga: ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இதனால் மனித வாழ்க்கையில் தாக்கம் இருக்கும் எனக்கு ஒரு படுகிறது. சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களோடு இணைந்து பல யோகங்களை உருவாக்குவார்கள். அந்த யோகங்கள் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மீன ராசியில் சுக்கிர பகவான் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் மார்ச் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் குரு பகவானின் மீன ராசிக்கு செல்கின்றார். மீன ராசியில் சுக்கிரன் மற்ற...