இந்தியா, ஏப்ரல் 29 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பலன்கள் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் கிரகமாற்றத்தின் பொழுது ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாக கூடும்.

அந்த வகையில் வருகின்ற ஜூன் மாதம் நவக்கிரகங்களில் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவானும், நவக்கிரகங்களில் செல்வத்தின் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரனும் இணைய போகின்றனர். இதனால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது.

சூரியன் சுக்கிரன் சேர்க்கை மூலம் உருவாகும் சுக்ராதித்ய யோகம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பெறப்ப...