இந்தியா, மார்ச் 5 -- Sukra Peyarchi: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கான அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுக்கிரனின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைகின்றார் இது ராகு பகவானின் சொந்தமான நட்சத்திரம் ஆகும்.

ராகு நட்சத்திரத்தில் சுக்கிரன் செல்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்...