இந்தியா, மார்ச் 22 -- Lord Sukra: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியில் செல்லும் பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது.

அதேபோல் சுக்கிரனின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து அரசுகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சுக்கிரன் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று எதிரி கிரகமாக விளங்கக்கூடிய குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். புரட்டாதி நட்சத்திரத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை பயணம் செய்வார். ...