இந்தியா, ஏப்ரல் 3 -- ஒரு மனிதனுக்கு நிம்மதியான தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். சரியான தூக்கம் இல்லாதது ஒருவரது ஆரோக்கியத்தை பல வகையில் பாதிக்கும். அந்த வகையில் சீரற்ற தூக்கம் மற்றும் விரைவான கண் இயக்கத்தோடு கூடிய தூக்கம் என இரு வகையான தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்சைமர் குறைபாடு வருவதற்கான ஆபத்து அதிகம் என ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழ்வில் தூக்கத்தை முன்னுரிமை படுத்த பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது மூளை ஆரோக்கியம் தான்.

மேலும் படிக்க | எத்தனை மணிக்குள் தூங்க சென்றால் இதய நோய் ஆபத்து குறையும் தெரியுமா? புதிய ஆய்வு கூறும் உண்மை என்ன?

கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் உள்ள யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் முதுகலை உதவியாளராக இருக்கும் கவோன் சோ கூறுகையில், "தூக்கத்தின் போது குறைக்கப்பட்ட நரம்பியல் செயல்பாடு மூளைச்...