இந்தியா, பிப்ரவரி 27 -- நடிகை விஜய லட்சுமி அளித்த கருக்கலைப்பு புகாரில் நேரில் ஆஜராக கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளரசவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் இன்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து கருக்கலைப்பு செய்தாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தார்.

அதில், சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு, விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற போலீசாருக்கு கோரிக்கை வைத்தார். இருந்தபோதிலும், போலீசார் வழக்கை முடிக்கவில்லை. இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில்...