இந்தியா, பிப்ரவரி 26 -- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான கருக்கலைப்பு வழக்கில் நடிகை விஜய லட்சுமி காவல்துறை அதிகாரிகளிடம் முக்கிய ஆவணங்களை கொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து கருக்கலைப்பு செய்தாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கை 12 வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் (27-02-2025) வளரவாக்கம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக சொல்லி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜய லட்சுமிடம்...