இந்தியா, பிப்ரவரி 27 -- நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டில் புகுந்து பாதுகாவலர் மற்றும் சம்மனை கிழித்த ஊழியர் ஆகியோரை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் யார் என்பது குறித்து இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது. இவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபோது, அவருடன் உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மகன் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை, சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட் விவகாரம் தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் அதிகாரிகளுக்கும், சீமான் வீட்டு பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாய கருகலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கில் ஆஜர் ஆகாததால், சென்னை நீலாங்கரை அருகே உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பா...