இந்தியா, பிப்ரவரி 27 -- சென்னை, சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட் விவகாரம் தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் அதிகாரிகளுக்கும், சீமான் வீட்டு பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாய கருகலைப்பு செய்ததாக நடிகை கொடுத்த வழக்கில் ஆஜர் ஆகாததால், சென்னை நீலாங்கரை அருகே உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வளசரவாக்கம் காவல்துறையின் சம்மன் ஒட்டினர். அதில் நாளை காலை சீமான் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்மனை சீமான் வீட்டில் உள்ள பணியாளர் சுதாகர் என்பவர் கிழித்தார். இது குறித்து விசாரிப்பதற்காக மப்டி உடையில் சென்றனர். அங்கிருந்த சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ், காவலரை தடுத்து நிறுத்த...