இந்தியா, ஏப்ரல் 18 -- நாம் தமிழர் கட்சியில் சீட் வேண்டும் என நினைப்பவர்கள் விஜய் கட்சிக்கு செல்லலாம் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் ஆடியோ வைரல் ஆகி வருகிறது

கோவையில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக கூறப்படும் ஆடியோ வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆடியோவில் சீமான், "தேர்தலில் வென்று வெளியில் வந்தார் பல்லக்கில் ஏற்றி மாலை. தோற்று வந்தால் பாடையில் ஏறி மாலை. எது எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபாம்" என பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கொள்கையை வலியுறுத்துகிறார். "நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக இந்தக் கட்சி உள்ளது. இந்த இடத்தில் நான் உறுதியாக நிற...