இந்தியா, பிப்ரவரி 25 -- சீமான் : சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை ராயப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

பெரியாரை பற்றி விமர்சனம் செய்ய தொடங்கிதான் உள்ளேன். நான் பெரியாரிடம் தான் இருந்தேன். இப்போது அதற்கு எதிராக உள்ளேன். ஒரு காலம் வரும் போது எனக்கு விழிப்புணர்வு வருகிறது. இவர்கள் கொள்கைக்காக வரவில்லை. கொள்ளையடிக்க வந்தவர்கள். நான் பெரியாரை படம் பார்த்துவிட்டு பேசவில்லை, படித்துவிட்டு பேசுகிறேன். நமது தாய் மொழி முட்டாள்களின் மொழி என்று சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் கொள்கை. ஆங்கிலத்தில் படிக்க வ...