இந்தியா, மார்ச் 3 -- சீமான் மீது நடிகை கொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. மேலும் எதிர்மனுதாரர் பதில்தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் 7 முறை வரை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் கடந்த 2011ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்து இருந்தார். நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் சென்னை வளரசவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.

அரசியல் பழிவாங்களுக்காக தமிழக அரசு இந்த வழக்கை முன்னெடுப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி இருந்...