இந்தியா, மார்ச் 29 -- Good Friday: ஒவ்வொரு மதத்தினரும் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ்தவர்களுக்கான மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக புனித வெள்ளி திருநாள் விளங்கி வருகிறது. கிறிஸ்மஸ் டிசம்பர் 25ஆம் தேதி அன்று அனைத்து ஆண்டுகளிலும் கொண்டாடப்படுகிறது. அதுபோல புனித வெள்ளி ஒரே நாளில் வருவது கிடையாது ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாளில் அனுசரிக்கப்படுகிறது.

வசந்த உத்திராயணத்தின் முதல் முழு நிலவு நாள் முடிந்த பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு புனித வெள்ளி மார்ச் 29ஆம் தேதி அதாவது இன்று அனுசரிக்கப்படுகிறது.

புனித வெள்ளி திருநாள் குறித்து தெரியாதவர்கள் இந்த திருநாளை ஒரு திருவிழா என நினைத்துக் கொள்வார்கள். அதிலும் இது மகிழ்ச்சியாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் திருநாள் என நினைப்ப...