இந்தியா, ஜூன் 22 -- சில நாட்களுக்கு முன்னதாக சிலம்பரசன், நெல்சன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இருப்பது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் சிலம்பரசனின் லுக்கை பார்த்தவர்கள் வெற்றிமாறன் வடசென்னை 2 திரைப்படத்தை சிலம்பரசனை வைத்து எடுக்கிறாரா என்ற கேள்விகளை முன்வைத்தனர்.

இதற்கு பல்வேறு பதில்களும் இணையத்தில் உலாவின. இந்த நிலையில் இதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசினார்.

அதில் அவர் பேசியதாவது, 'வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வட சென்னை 2 திரைப்படம் உருவாகிறது. அந்தப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை இவர்கள் உட்கார்ந்து பேசி விட்டனர். இதற்கிடையே வடசென்னை 2 திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கிறார் என்ற தகவல்கள் வந்து கொண்டி...