இந்தியா, பிப்ரவரி 26 -- தமிழில் உணவே மருந்து என்ற ஒரு கூற்று உள்ளது. இதன் அடிப்படையில் நாம் சாப்பிடும் உணவுகளை நமது நோய்களுக்கு தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நமது உணவில் சில காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். இந்த வரிசையில் சிறுநீரக கற்கள் பிரச்சனைகள் உடையவர் உணவில் வாழைத்தண்டினை சேர்த்துக் கொள்வது அவருக்கு நன்மை பயக்கும் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய வாழைத்தண்டினை வைத்து வழக்கமாக சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடுவதுண்டு. ஆனால் இதனை சுவையான குழம்பாகவும் செய்து சாப்பிடலாம். இது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். வாழை தண்டினை வைத்து கமகமக்கும் மணத்துடன் அருமையான சுவையில் குழம்பு செய்வது எப்படி என்பத...