இந்தியா, மார்ச் 13 -- மார்ச் 13, இன்று உலக சிறுநீரக தினம். இன்றைய நாளில் நமது சிறுநீரகத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும். தமிழகத்தில் சிறுநீரகக் கோளாறுகளின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது

2016ம் ஆண்டு புள்ளிவிவரம் ஒன்று 2017ம் ஆண்டில் வெளியானது. இந்தியா மற்றும் தமிழ்நாடு என நாம் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். இந்த காலகட்டத்தில் இந்தியாவில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 பேருக்கு 132ஆக இருந்தது. தமிழ்நாட்டில் அது 208 என அதிகரித்து இருந்தது. சர்க்கரை நோயில் இந்தியாவில் 1000 பேருக்கு 23 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 53 என அதிகம் உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18 என இந்திய அளவில் இருந்தபோது, 35 என தமிழகத்தி...