இந்தியா, மார்ச் 7 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 7 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் முத்து, மனோஜ், ரவி மூவரும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் ரவியிடம் நீ மாமியார் கொடுக்கும் காசை வைத்து ரெஸ்டாரன்ட் ஆரம்பி எப்படி இருந்தாலும் அது ஸ்ருதிக்கு வர வேண்டிய காசு தான். அவங்களுக்கு அப்புறம் ஸ்ருதிக்கு தான் அந்த காசு எல்லாம் வந்து சேரும். எனவே அந்த காசை வைத்து நீ ரெஸ்டாரன்ட் ஆரம்பி என சொல்கிறார்.

அவன் சொல்வதை எல்லாம் நீ கேட்காதே என முத்து சொல்ல, அவங்க மாமியார் வீட்டில் இருந்து அவனுக்கு ஒண்ணுமே கிடைக்காது அதனாலதான் அவன் இப்படி பேசுறான் என மனோஜ் சொல்கிறார். அதற்கு ரவி என் பொண்டாட்டி வீட்டில கொடுக்கிற காசு எனக்கு வேண்டாம். என் சொந்த முயற்சியில் நான் முன்னேறனும் என சொல்கிறார...