இந்தியா, மார்ச் 6 -- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று எபிசோட் குறித்து பார்க்கலாம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வித்யா சாமி கும்பிட்டு கொண்டிருக்க முருகன் வித்யாவின் பின்னால் சென்று அடுத்து என்னங்க என்று கேட்க நான் அப்புறம் சொல்றேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். வித்யா வெளியில் சென்றவுடன் சீதா கோயிலுக்குள் வந்து அருனுடன் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு இருவரும் நடந்து வருகின்றனர்.

இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ணனும் என்று அருண் கேட்க உங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது கொஞ்ச நாள் ஃப்ரண்டா பழகுவோம் என்று சீதா சொல்கிறார். கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ண மாட்டீங்களா என சீதா கேட்க சரி நான் வெயிட் பண்றேன் என அருண் சொல்லுகிறார். மறுபக்கம் பரசு கல்யாணத்திற்கான வேலைகளுக்கு பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்க முத்துவும், மீனாவும் அவர் வீட்டிற்கு சென்ற...