இந்தியா, மார்ச் 4 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 4 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். மருத்துவமனையில் இருந்து மனோஜை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். அப்போது ரோகினியும், விஜயாவும் மனோஜிடம் பார்த்து வா என அக்கறையாக பேசி கூட்டி வருகிறார்கள். அப்போது முத்து தலை குனிந்தே வா, அதிக வெளிச்சத்தை பார்க்க கூடாது என டாக்டர் சொல்லி இருக்காங்க என அறிவுரை வழங்கிய போது விஜயா அது எங்களுக்கு தெரியும் என முத்துவிடம் கடிந்து கொள்கிறார். பின்னர் முத்து நல்லதுக்கு காலமே இல்லை என சொல்லிவிட்டு அனைவரும் வீட்டுக்கு செல்கிறார்கள்.

வீட்டு வாசலுக்கு சென்றவுடன் விஜயா மீனா எங்கே என கேட்கிறார். அப்போது முத்து என்ன வந்தவுடன் மீனாவை கேட்கிறீர்கள் அவ்வளவு பாசமா என கேட்கிறார். அப்போது விஜயா அண்ணாமலை இடம் அவளை ஆர்த்தி கரைத்து எடுத்து வர ...