இந்தியா, மார்ச் 3 -- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை திட்டுகிறார். காலையில் சமைக்காமல் எங்கு சென்றாள், என் பையன் மருத்துவமனையில் இருக்கிறான். அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் காலையிலேயே சென்றுவிட்டால். பொறுப்பான மருமகள் என்று சொல்லுவீர்களே உங்கள் மருமகளின் பொறுப்பை பார்த்தீர்களா? என அண்ணாமலையிடம் கேட்கிறார். பின்னர் முத்துவையும் சேர்த்து திட்டுகிறார். முத்துவும் வீட்டில் இல்லையா அவனும் சேர்ந்து போய் விட்டானா? அவள் வெளியில் இருந்து வந்தவள். இவனுக்கு எங்கே போச்சு புத்தி என திட்டுகிறார். இருவருக்கும் பணம் பைத்தியம் பிடித்து விட்டது. பணம் பணம் என அழைக்கிறார்கள் என விஜயா திட்டுகிறார்.

ரவி அப்போது மீனா குறித்து சொல்ல வருகிறார். ஆனால் ரவியை பேசவிடாமல் விஜயா மேலும் மேலும் மீனாவை திட்டி...