இந்தியா, மார்ச் 29 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 29 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் என் தம்பி யார் தெரியுமா? அவன் வந்தானா என்ன நடக்கும் தெரியுமா? என சொல்லி கொண்டிருக்கிறார். அப்போது போலீஸ் ஸ்டேஷன் வந்த அண்ணாமலை மனோஜ் சட்டை இல்லாமல் இருப்பதை பார்த்து வருத்தம் அடைகிறார்.

பின்னர் முத்துவும் அருணும் சத்திக்கிறார்கள். அருணிடம் முத்து என் மேல இருக்கிற கோவத்தை அவன் மேல காட்டிட்டு இருக்கியா? என்று கேட்க அதற்கு அருண் அவன் உன் அண்ணன்னு எனக்கு இப்பதான் தெரியும் என்று சொல்லுகிறார். நீ ரவுடியா இருக்க உன் அண்ணன் குடிகாரனா இருக்கான். இப்படித்தான் பசங்கள வளப்பாங்களா? என்று அண்ணாமலையிடம் அருண் கேட்கிறார். எதுவும் பேச முடியாமல் அண்ணாமலை அமைதியாக இருக்கிறார்.

மேலும் படிக்க : ...